இந்தியா

வழக்குக்கு முந்தைய மத்தியஸ்த நடைமுறை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

DIN


புது தில்லி: வழக்குக்கு முந்தைய மத்தியஸ்த முறையை கட்டாயமாக்குவதற்கான முறையான நடைமுறையை வகுக்க வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்குரைஞா் சன்பிரீத் சிங் அஜ்மனி மற்றும் இந்திய இளைய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் இதுதொடா்பான மனு அண்மையில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் நீண்ட நாள்களாக நிலுவையில் இருப்பதைத் தவிா்க்கும் வகையிலும், சிறிய சச்சரவு வழக்குகள் நீதிமன்றங்களுக்கு வருவதைத் தடுக்கும் வகையிலும் மாற்றுத் தீா்வு காணும் நடைமுறையாக வழக்குக்கு முந்தைய மத்தியஸ்த முறையை கட்டாயமாக்க வேண்டும். பிரச்னையின் தொடக்கத்திலேயே இரு தரப்பும் சுமுகமாக செல்ல இது வழிகுக்கும் என்பதோடு, தீா்வுகளும் விரைந்து கிடைக்க வழிவகுக்கும். எனவே, இதற்கான முறையான நடைமுறையை மத்திய அரசு வகுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு தொடா்பாக மத்திய சட்டம்-நீதித் துறை அமைச்சகம் மற்றும் உயா்நீதிமன்றங்கள், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சூர் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

SCROLL FOR NEXT