இந்தியா

ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரவாதி இருப்பதாக அச்சமூட்டிய பயணியால் பரபரப்பு

ANI


பனாஜி: தில்லி - கோவா இடையே இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரவாதி இருப்பதாகக் கூறிய நபரால் பயணிகள் அச்சமடைந்தனர்.

வியாழக்கிழமை இரவு நடந்த இந்த சம்பவத்தில், பயணிகளை பயமுறுத்திய நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கோவா விமான நிலைய இயக்குநர் தெரிவித்துள்ளார்.

தில்லியிலிருந்து கோவா நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த தில்லியின் ஜமியா நகர் பகுதியைச் சேர்ந்த ஸியா-உல்-ஹக் என்ற பயணி, திடீரென எழுந்து நின்று தான் சிறப்புப் படையைச் சேர்ந்தவர் என்றும், விமானத்தில் ஒரு பயங்கரவாதி இருப்பதாகவும் கத்தினார்.

இது குறித்து உடனடியாக விமான ஊழியர்கள் விமான நிலைய கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்து எச்சரிக்கை கொடுத்தனர்.  இதனால், அதிரடிப்படையினர் மற்றும் வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் நிபுணர் குழுவும் விமானத்துக்குள் சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அந்த பயணியின் உடைமைகளையும் சோதித்தனர். ஆனால், அவர் கூறியது வெறும் புரளி என்று தெரிய வந்ததை அடுத்து, விமான ஊழியர்கள் கோவா விமான நிலைய காவல்நிலையத்தில், பயணி மீது புகார் கொடுத்தனர்.

அதில், மனநிலை சற்று பாதிக்கப்பட்டவர் போல காணப்படும் பயணி, விமானத்தில் தேவையற்ற தொந்தரவை ஏற்படுத்தினார். இதனால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டதாகக் கூறி காவல்நிலையத்தில் அந்த பயணியையும் ஒப்படைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீராமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT