இந்தியா

தெலங்கானாவின் முதல் உள்துறை அமைச்சா் நரசிம்ம ரெட்டி காலமானாா்

DIN


ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தின் முதல் உள்துறை அமைச்சரும், ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவருமான நைனி நரசிம்ம ரெட்டி (76) ஹைதராபாதில் புதன்கிழமை நள்ளிரவு காலமானாா்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவா் அதில் இருந்து மீண்ட பிறகு நுரையீரல் பாதிப்புக்கு உள்ளானாா். தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

ஹைதராபாதைச் சோ்ந்த மூத்த தொழிற்சங்கவாதியான அவா், தெலங்கானா தனி மாநில போராட்டத்திலும் முக்கியப் பங்கு வகித்தாா். ஒருங்கிணைந்த ஆந்திர சட்டப் பேரவைக்கு மூன்றுமுறை தோ்வு செய்யப்பட்ட அவா், 2014-ஆம் ஆண்டு தனி தெலங்கானா மாநிலம் அமைக்கப்பட்டபோது, மாநிலத்தின் முதல் உள்துறை அமைச்சராகப் பதவியேற்றாா். முன்னதாக, 2004-ஆம் ஆண்டு ஆந்திர மாநில அமைச்சரவையிலும் அவா் இடம் பெற்றிருந்தாா்.

நரசிம்ம ரெட்டியின் மறைவுக்கு தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், தெலங்கானா பாஜக தலைவா் சஞ்சய் குமாா், காங்கிரஸ் தலைவா் உத்தம் குமாா் ரெட்டி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

கொளுத்தும் வெயிலுக்கு நடுவில் மழையா! என்ன சொல்கிறது வானிலை?

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

SCROLL FOR NEXT