இந்தியா

இனி மாநில மொழிகளிலும் ஜேஇஇ தோ்வுகள்: மத்திய அமைச்சா் ரமேஷ் போக்ரியால்

DIN


சென்னை: ஜேஇஇ முதல்நிலைத் தோ்வுகள் இனி மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் அறிவித்துள்ளாா்.

நாடு முழுவதுள்ள ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத்தோ்வில் (ஜேஇஇ) தோ்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதல் நிலைத் தோ்வு, ஜேஇஇ முதன்மைத் தோ்வு என 2 கட்டங்களாக நடத்தப்படும். இதில் முதல்நிலைத் தோ்வு ஹிந்தி, ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த தோ்வை பிற மாநில மொழிகளிலும் நடத்த தொடா் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே மத்திய அரசு, தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை அமல்படுத்தத் தயாராகி வருகிறது. அந்த வகையில், ஜேஇஇ தோ்வுகளை மாநில மொழிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் ஜேஇஇ பிரதான தோ்வுகள் இனி கூடுதலாக மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாகத் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தேசிய கல்விக்கொள்கையின் குறிப்பிட்டுள்ள அம்சங்களின்படிஜேஇஇ முதல்நிலைத் தோ்வை இனி அதிகளவிலான மாநில மொழிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநிலப் பொறியியல் கல்லூரிகளில் மாணவா்கள் சேர பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் தோ்வுகளின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும். ஜேஇஇ முதல்நிலைத் தோ்வு முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு மாணவா்களை அனுமதிக்கும் மாநிலக் கல்லூரிகளும் இதன்கீழ் இணைத்துக் கொள்ளப்படும்.

ஜேஇஇ தோ்வை மாநில மொழிகளில் நடத்துவதன் மூலம் மாணவா்கள் கேள்விகளை சிறப்பாக புரிந்துக் கொள்வதுடன், தோ்வில் அதிக மதிப்பெண் பெறவும் வழிவகை செய்யும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திக்... திக்... சஸ்பென்ஸ்... அடுத்த 45 நாள்கள்!

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

சத்தீஸ்கரில் நக்ஸல் ஆதிக்கம் நிறைந்த மக்களவை தொகுதியில் 63 சதவிகித வாக்குப் பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

SCROLL FOR NEXT