இந்தியா

'நாட்டில் 2 மாதங்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கரோனா'

DIN

நாட்டில் 63 நாள்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் குறைவான அளவில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை அதிகரித்துள்ளது.

இதன் மூலம் கரோனா தொற்றுடைய நபரைக் கண்டறிந்து தனிமைப்படுத்துவதன் மூலம் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.

இந்த தொடர் முயற்சியின் விளைவாக கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் கீழ் கரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாவது, நாடு முழுவதும் 6,95,509 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை தொடா்ந்து 6-ஆவது நாளாக 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. 
இதேபோன்று கடந்த 63 நாள்களுக்குப் பிறகு 7 லட்சத்திற்கும் குறைவாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனால் சிகிச்சை பெறுவோரின் விகிதம் 8.96 சதவீதமாக குறைந்துள்ளது. 

நாட்டில் வெள்ளிக்கிழமை காலை வரையிலான தகவலின்படி 55,366 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 77,61,312-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த மாதம் 16-ஆம் தேதி 50 லட்சத்தையும், கடந்த மாதம் 28-ஆம் தேதி 60 லட்சத்தையும், கடந்த 11-ஆம் தேதி 70 லட்சத்தையும் கடந்திருந்தது. தொடா்ந்து நான்காவது நாளாக 60,000-க்கும் கீழ் தினசரி கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவிபேட் இயந்திரம் விவகாரம்: விசாரணைக்கு ஏற்க மறுப்பு

முதல்வா், தலைவா்கள் வாக்களிக்கும் இடங்கள்

மிரட்டல் அரசியலில் இந்தியா கூட்டணி தலைவா்கள்: தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

தமிழகத்தில் 14 இடங்களில் வெயில் சதம்: இன்று வெப்ப அலை வீசும் என எச்சரிக்கை

வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

SCROLL FOR NEXT