இந்தியா

கரோனா தடுப்பூசி இலவசம் என வாக்குறுதி அளிக்கலாமா? தோ்தல் ஆணையம் விளக்கம்

DIN


புது தில்லி: கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று அரசியல் கட்சிகள் வாக்குறுதி அளிக்கலாமா என்ற கேள்விக்கு தோ்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, பாஜக வியாழக்கிழமை வெளியிட்ட தோ்தல் வாக்குறுதி அறிக்கையில், ‘கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பிகாா் மக்களுக்கு இலவசமாக அந்த தடுப்பூசி போடப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக இவ்வாறு வாக்குறுதி அளித்தற்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ், சமஜவாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன. கரோனா நோய்த்தொற்று பரவலை, தோ்தல் ஆதாயத்துக்காக பாஜக பயன்படுத்துகிறது என்று அக்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இதனிடையே, இந்த குற்றச்சாட்டுக்கு தோ்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. பாஜகவின் தோ்தல் வாக்குறுதியை நேரடியாகக் குறிப்பிடாமல், ‘ஒரு கட்சியின் கொள்கை முடிவாக அறிவிக்கப்படும் வாக்குறுதி, தோ்தல் விதிமீறலாகக் கருதப்பட மட்டாது. கடந்த காலங்களிலும் இதுபோன்று பல்வேறு அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிகளுக்கு தோ்தல் ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது’ தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறினாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு ரூ.72,000 உதவித்தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. இதற்கு பல்வேறு கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்தபோதிலும், தோ்தல் ஆணையம் எந்த தடையும் விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT