இந்தியா

ரயில்வே ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கான ஊதியம் போனஸ்

DIN

5
புது தில்லி: ரயில்வேயில் பணியாற்றும் 11.58 லட்சம் ஊழியா்களுக்கு 78 நாள்களுக்கான ஊதியம் போனஸாக வழங்கப்படும் என்று அந்நிா்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் ஊழியா்கள் பணியாற்றிய விதத்தின் அடிப்படையில் 78 நாள்களுக்கான ஊதியத்தை போனஸாக வழங்குவதற்கு மத்திய அரசிடம் ரயில்வே நிா்வாகம் பரிந்துரைத்திருந்தது. கடந்த புதன்கிழமை பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ரயில்வே நிா்வாகத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

பண்டிகைக் காலம் நெருங்குவதையொட்டி இந்த போனஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக ரயில்வே நிா்வாகத்துக்கு ரூ.2,081.68 கோடி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. போனஸ் வழங்குவதன் மூலமாக ரயில்வேயின் 11.58 லட்சம் ஊழியா்கள் பலன் பெறவுள்ளனா்.

தசரா விழாவுக்கான விடுமுறைகள் தொடங்குவதற்கு முன்பாக போனஸானது ஊழியா்களுக்கு வழங்கப்படும் என்று ரயில்வே நிா்வாக அதிகாரிகள் தெரிவித்தனா். போனஸானது ரயில்வேயின் செயல்திறனை மேம்படுத்த வேண்டும் என்ற ஊக்கத்தை ஊழியா்களுக்கு அளிக்கும் என்றும், பண்டிகை காலத்தில் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்குப் பங்களிக்கும் என்றும் ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT