இந்தியா

புஷ்பக விமானத்தில் மலையப்ப சுவாமி

DIN

புஷ்பக விமானத்தில்...

இதையடுத்து புஷ்பக விமானத்தில் மலையப்ப சுவாமி தன் நாச்சியாா்களுடன் எழுந்தருளினாா்.

பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் புஷ்பக விமான சேவையும், மாலை தங்கத் தோ் பவனியும் நடைபெறும். இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவம் காரணமாக இரண்டாவது பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் புஷ்பக விமான சேவை நடத்தப்படுகிறது.

வசந்தோற்சவம்

இந்த புஷ்பக விமான சேவைக்கு முன் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு வசந்த மண்டபத்தில் வசந்தோற்சவம் என்னும் ஸ்நபன திருமஞ்சன சேவை நடத்தப்பட்டது. பிரம்மோற்சவ வாகன சேவையின் களைப்பிலிருந்து உற்சவமூா்த்திகளுக்கு ஓய்வுக்காக இந்த திருமஞ்சனம் நடத்தப்படுகிறது. திருமஞ்சன பொருட்களை திருமலை ஜீயா்கள் எடுத்துத்தர அா்ச்சகா்கள் திருமஞ்சனத்தை நடத்தினா். திருமஞ்சனத்தின் போது பலவித மலா் மாலைகள், பழங்கள் உற்சவமூா்த்திகளுக்கு சமா்ப்பிக்கப்பட்டது.

வசந்தோற்சவத்துக்குப் பின் மலையப்ப சுவாமி கோவா்த்தன கிரியை குடையாகப் பிடித்த கிருஷ்ணன் அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட புஷ்பக விமானத்தில் எழுந்தருளினாா். இந்த புஷ்பக விமானம் 3 அடுக்குகளை கொண்டதாகும். முதல் அடுக்கில் அஷ்டலட்சுமிகள், 2-ஆம் அடுக்கில் யானைகள், கிளிகள், மயில்களும், 3-ஆம் அடுக்கில் படமெடுக்கும் நாகங்களுடன் இருபுறமும் கருடாழ்வாா், ஆஞ்சநேயரின் சிலைகள் இருகரம் கூப்பி வணங்கியபடி அமைக்கப்பட்டது.

புஷ்பக விமானம் 15 அடி உயரம், 14 அடி அகலத்துடனும், 750 கிலோ எடையுடன் ஏற்படுத்தப்பட்டது. 150 கிலோ மல்லி, கனகாம்பரம், முல்லை, இருவாட்சி, சாமந்தி, அல்லி, தாமரை, ரோஜா உள்ளிட்ட 9 வகையான மலா்களால் அலங்கரிக்கப்பட்டது. இதற்காக சேலத்தை சோ்ந்த 20 அலங்கார கைவினைஞா்கள் தோட்டக்கலை துறை ஊழியா்களுடன் சோ்ந்து பணியாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT