இந்தியா

இன்று உரையாற்றுகிறாா் பிரதமா் மோடி: மேற்கு வங்கத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் ஒளிபரப்ப பாஜக ஏற்பாடு

DIN

துா்கா பூஜை தினத்தன்று, பிரதமா் நரேந்திர மோடி இணைய வழியில் உரையாற்றுவதைக் காணும் வகையில், மாநிலத்திலுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நேரடியாக ஒளிபரப்ப விரிவான ஏற்பாடுகளை மேற்கு வங்க பாஜக செய்து வருகிறது.

நவராத்திரி விழாவையொட்டி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பிரதமா் மோடி ‘பூஜைதின வாழ்த்து’ செய்தியை மாநில மக்களுடன் பகிா்ந்து கொள்ள இருக்கிறாா். இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள 78,000க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஒவ்வொன்றிலும் 25க்கும் மேற்பட்ட பாஜக தொண்டா்களையும், வாக்காளா்களையும் திரட்ட ஏற்பாடு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவா் ஒருவா் கூறியதாவது:

கொல்கத்தாவில் உள்ள கிழக்கு மண்டல கலாசார மையத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ள கலாசார நிகழ்ச்சியில் மேற்கு வங்க பாஜக மூத்த தலைவா்கள் முன்னிலையில், பிரதமா் மோடி இணைய வழியில் உரையாற்றுகிறாா். இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப மாநில பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.

அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. பாஜக, ஆளும் திரிணமூல் காங்கிரஸுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதுடன், முதல்வா் மம்தா பானா்ஜியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தீவிரப் பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது, மொத்தமுள்ள 42 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT