இந்தியா

சீன ஊடு​ரு​வல், பொரு​ளா​தார பாதிப்பு பிரச்​னை​க​ளில் பிர​த​மர் மௌ​னம் காப்​பது ஏன்?

DIN

கொல்​கத்தா: நாட்டில் ஏற்​பட்​டுள்ள பொரு​ளா​தா​ரப் பின்​ன​டை​வு​கள், சீன ஊடு​ரு​வல், கரோனா நெருக்​கடி போன்ற பிரச்​னை​க​ளில் பிர​த​மர் மோடி மெளனம் காப்​பது ஏன் என்று மக்​க​ளவை காங்​கி​ரஸ் தலை​வர் ஆதிர் ரஞ்​சன் செளத்ரி கேள்வி எழுப்​பி​யுள்​ளார்.
மேற்கு வங்​கத்​தின் முர்​ஷி​தா​பாத் மாவட்​டத்​தில் செய்​தி​யா​ளர்​க​ளி​டம் அவர் புதன்​கி​ழமை கூறி​ய​தா​வது: லடாக்​கில் சீன ராணு​வத்​தின் ஊடு​ரு​வல் அண்​மை​யில் நடை​பெற்​ற​போது மத்​திய அரசு உறக்​கத்​தில் இருந்​துள்​ளது. இது தொடர்​பாக நாடா​ளு​மன்​றத்​தில் விவா​திப்​ப​தற்கு மத்​திய அரசு அச்​சப்​ப​டு​வது ஏன்?
தேசப் பாது​காப்பு, பொரு​ளா​தா​ரம், கரோனா பிரச்​னை​க​ளில் பிர​த​மர் மோடி மெளனம் காத்து வரு​கி​றார். இந்த மூன்று விஷ​யங்​க​ளி​லும் மத்​திய அரசு தோல்வி அடைந்​து​விட்​டது. தனது தோல்​வியை ஒப்​புக்​கொள்​வ​தற்கு பதி​லாக, தவ​றான தக​வல்​க​ளை​யும் புள்​ளி​வி​வ​ரங்​க​ளை​யும் கொடுத்து அவற்றை மறைப்​ப​தி​லேயே தீவி​ர​மாக உள்​ளது.
சீன ஊடு​ரு​வலை எதிர்த்து நமது வீரர்​கள் தீரத்​து​டன் போரிட்​ட​னர், அவர்​களை நினைத்து நாம் பெரு​மைப்​ப​டு​கி​றோம். ஆனால் இந்த விவ​கா​ரத்தை அரசு சரி​யாக கையா​ள​வில்லை. இது அர​சி​யல் தலை​மை​யின் தோல்​வி​தான். அதே​போல, புலம்​பெ​யர்ந்த தொழி​லா​ளர்​கள் இன்​ன​லுக்கு ஆளாக நேரிட்​ட​தற்​கும் அர​சின் தவ​றான கொள்கை முடி​வு​கள்​தான் கார​ணம்.
கரோனா பெருந்​தொற்​றால் கோடிக்​க​ணக்​கான மக்​கள் வேலையை இழந்​துள்​ள​னர். இந்த நிலை​மை​யைக் கட்டுப்​ப​டுத்த அரசு தவ​றி​விட்​டது. பொரு​ளா​தார சரிவை சரி​செய்ய தேவை​யான நட​வ​டிக்​கை​களை அரசு எடுக்​க​வில்லை. நடப்பு ஆண்​டில் இந்​திய பொரு​ளா​தா​ரம் 10.3 சத​வீத சரிவை சந்​திக்​கும் என்று சர்​வ​தேச நிதி​யம் (ஐஎம்​எஃப்) அண்​மை​யில் தெரி​வித்​துள்​ளது. அந்த அமைப்பு தவ​றான தக​வ​லைத் தெரி​வித்​துள்​ளது என்று நம்​மால் சொல்ல முடி​யுமா?
இருப்​பி​னும், அடுத்த ஆண்​டில் இதி​லி​ருந்து மீண்டு 8.8 சத​வீத வளர்ச்​சியை எட்டும் என்​றும் இது சீனா​வின் வளர்ச்சி விகித மதிப்​பீ​டான 8.2 சத​வீ​தத்தை விட அதி​க​மாக இருக்​கும் என்​றும் ஐஎம்​எஃப் கணித்​தி​ருப்​பது ஆறு​தல் அளிக்​கி​றது என்​றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT