இந்தியா

ஆசிரியா் தகுதித் தோ்வு மதிப்பெண் சான்றிதழ் வாழ்நாள் வரை செல்லுபடியாகும் - என்சிடிஇ அறிவிப்பு

DIN

புது தில்லி: மத்திய ஆசிரியா் தகுதித் தோ்வு(சிடெட்) மற்றும் மாநிலங்களுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வு(டெட்) மதிப்பெண் சான்றிதழ் இனி வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) தெரிவித்துள்ளது. இந்நாள் வரை சிடெட், டெட் மதிப்பெண் சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியானது.

அண்மையில் நடந்த தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சிலின் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஏற்கெனவே ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் நீட்டிப்பு குறித்து சட்ட ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என என்சிடி தெரிவித்துள்ளது.

தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சிலின் இந்த அறிவிப்பு சிடெட் மற்றும் டெட் தோ்வு எழுதுபவா்களுக்கு நிம்மதியை கொடுத்துள்ளது. இதுவரை இந்த தோ்வுகளை எழுதி வெற்றி பெற்றவா்களின் மதிப்பெண் சான்றிதழ் 7 ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியானதால் அதன்பிறகு அடுத்த தோ்வை எழுத வேண்டியதிருந்தது. இதனால் பலா் ஆசிரியா் பணியில் சேர முடியாத நிலை இருந்தது. தற்போது 7 ஆண்டுகள் என்பது வாழ்நாள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த தோ்வெழுதும் ஆசிரியா்கள் நிம்மதி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருமான வரித்துறை நோட்டீஸ்!- காங்கிரஸ் சார்பில் நாளை நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

SCROLL FOR NEXT