இந்தியா

பிரதமர் மோடி இன்று உரை: மேற்கு வங்கம் முழுவதும் ஒளிபரப்ப பாஜக ஏற்பாடு

DIN


புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை (அக்.22) இணைய வழியில் உரையாற்றுவதை மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச் சாவடி அளவிலும் நேரடியாக ஒளிபரப்ப அந்த மாநில பாஜக ஏற்பாடு செய்து வருகிறது.
நவராத்திரி விழாவையொட்டி வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு பிரதமர் மோடி "பூஜைதின வாழ்த்து' செய்தியை  மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். இதையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள 78,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் சமூக இடைவெளியைப் பின்பற்றி, ஒவ்வொன்றிலும் 25-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்களையும், வாக்காளர்களையும் திரட்ட ஏற்பாடு செய்துள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது: 
கொல்கத்தாவில் உள்ள கிழக்கு மண்டல கலாசார மையத்தில் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ள கலாசார நிகழ்ச்சியில் மேற்கு வங்க பாஜக மூத்த தலைவர்கள் முன்னிலையில், பிரதமர் மோடி இணைய வழியில் உரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப மாநில பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 அடுத்த ஆண்டு மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, ஆளும் திரிணமூல் காங்கிரஸýக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளதுடன், முதல்வர் மம்தா பானர்ஜியின் 10 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் தீவிரப் பிரசாரத்தையும் மேற்கொண்டுள்ளது. 
கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 42 தொகுதிகளில்  திரிணமூல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பாஜக 18 தொகுதிகளிலும் வென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT