இந்தியா

ஒடிசாவில் தொடர்ந்து 4-வது நாளாக 2,000-க்கும் குறைவான பாதிப்பு பதிவு

PTI

ஒடிசாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,913 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து நான்காவது நாளாக வியாழக்கிழமை 2,000-க்கும் குறைவான பாதிப்பு மாநிலத்தில் பதிவாகியுள்ளன.

இன்றைய பாதிப்பில், 1,109 பேர் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்தும், 804 உள்ளூரிலும் வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

புதிதாக 1,913 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,76,094-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு 19,932 பேர் சிகிச்சைப் பெற்று  வருகின்றனர்.  கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,54,913-ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 15 பேர் உயிரிழந்ததால் மொத்தமாக கரோனாவால் 1,196-ஆக அதிகரித்துள்ளது. 

புதன்கிழமை மட்டும் 40,114 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை ஒடிசாவில் மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 99 லட்சமாக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

SCROLL FOR NEXT