இந்தியா

'நிதிஷ் குமார் பலவீனமாக உள்ளார்': தேஜஸ்வி யாதவ்

DIN

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பலவீனமடைந்துள்ளதாக ரஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் விமர்சித்துள்ளார்.

நிதிஷ் குமாரால் தொடர்ந்து மாநிலப் பொறுப்புகளை கவனித்துக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

பிகாரில் வரும் 28-ஆம் தேதி, நவம்பர் 3 மற்றும் 7-ஆம் தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளக் கூட்டணியில் பாஜகவும் போட்டியிடுகிறது.

இதனிடையே முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரத்தின்போது பேசிய தேஜஸ்வி யாதவ், ''பிகாரில் பேரழிவு ஏற்பட்டபோது நிதிஷ் குமார் எங்கே இருந்தார் என்று மக்கள் கேட்கின்றனர். எந்த அடிப்படையில் அவர் தனக்கு வாக்களிக்குமாறு மக்களைக் கேட்கிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக மாநிலத்தில் வேலைவாய்ப்புக்கான வழிகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. எந்தவொரு நிறுவனத்தின் முதலீடும் அதிகரிக்கவில்லை. இதனால் தொழிலுக்காக புலம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிகையே  மாநிலத்தில் அதிகரித்தது. வறுமையில் வாடுவோரின் விகிதம் குறையவில்லை. இவ்வாறு இருக்க எதன் அடிப்படையில் மீண்டும் வாக்களிக்குமாறு மக்களிடம் நிதிஷ் குமார் கோருகிறார்'' என்று விமர்சித்தார்.

மேலும், ''அரசு ஊழியர்களுக்கு 50 வயதில் ஓய்வு கிடைக்கும் என்று நிதிஷ் குமார் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இது அகற்றப்படும்'' என்றும் தேஜஸ்வி வாக்குறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பணி புத்தன்தருவையில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் ரங்கோலி கோலமிட்டு தோ்தல் விழிப்புணா்வு

முட்டை விலை நிலவரம்

பரமத்தி வேலூரில் ரூ.10 லட்சத்து 58 ஆயிரத்திற்கு கொப்பரை ஏலம்

வெப்ப அயா்ச்சியால் கோழிகள் இறப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT