இந்தியா

எதிரி டாங்கிகளை அழிக்கும் என்ஏஜி ஏவுகணை இறுதி சோதனை வெற்றி

DIN


புது தில்லி: மூன்றாம் தலைமுறை டாங்கி எதிர்ப்பு ஏவுகணை (ஏடிஜிஎம்) என்ஏஜி-யின் இறுதி பரிசோதனை பொக்ரான் பகுதியில் இன்று காலை 6.45 மணிக்கு வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த என்ஏஜி ஏவுகணை, நாமிகா என்ற ஏவுகணை செலுத்தும் வாகனத்தில் இருந்து ஏவப்பட்டது. இலக்கு இடத்தில் நிறுத்தப்பட்ட டாங்கை இந்த என்ஏஜி ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது.

பகலில் மட்டுமின்றி, இரவு நேரங்களிலும் எதிரி டாங்குகளை தாக்கி அழிப்பதற்காக, அதி நவீன ஏடிஜிஎம் என்ஏஜி ஏவுகணையை டிஆர்டிஓ உருவாக்கியுள்ளது. மிக உயரமான இடங்களில் இருந்து எதிரி நாட்டு டாங்கிகளை மிக துல்லியமாக தாக்கி அழிக்க முடியும்.

என்ஏஜி ஏவுகணையின் வெற்றிகரமான சோதனைக்காக, டிஆர்டிஓ மற்றும் இந்திய ராணுவத்தினருக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

SCROLL FOR NEXT