இந்தியா

மகாராஷ்டிரம்: தேசியவாத காங்கிரஸில் இணைகிறார் பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் கட்சே

DIN

மும்பை:  மகாராஷ்டிர மாநில பாஜக மூத்த தலைவர் ஏக்நாத் ராவ் கட்சே அக்கட்சியிலிருந்து விலகி, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் (என்.சி.பி.) வெள்ளிக்கிழமை இணையவுள்ளதாக, அமைச்சர் ஜெயந்த் பாட்டீல் தெரிவித்தார்.
இதுதொடர்பாக என்சிபி மாநிலத் தலைவரும், நீர்வளத் துறை அமைச்சருமான ஜெயந்த் பாட்டீல் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது: மறைந்த கோபிநாத் முண்டேவுடன் சேர்ந்து இம்மாநிலத்தில் பாஜகவை பலப்படுத்த கடுமையாக உழைத்த கட்சே, அக்கட்சியிலிருந்து விலக விரும்புவதாக சில ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், அவர் அக்கட்சியிலிருந்து புதன்கிழமை விலகியுள்ளார். அவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் வெள்ளிக்கிழமை (அக். 23) இணையவுள்ளார்.
முன்னாள் அமைச்சரும், பேரவையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான அவரைப்போன்ற அனுபவமுள்ள தலைவர் இணைவதால் என்சிபி மேலும் பலப்படும். அவருடன் ஏராளமானோர் என்சிபியில் சேர விரும்புகின்றனர். எனக்குக் கிடைத்த தகவல்படி, எம்எல்ஏக்கள் பலர் கட்சேவுடன் தொடர்பில் உள்ளனர். 
மூத்த தலைவர் ஏன் கட்சியிலிருந்து விலகினார் என்பது குறித்து பாஜக ஆழ்ந்து ஆராயும். அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சிலரும் என்.சி.பி.யில் சேரத் தயாராக உள்ளனர். இதுகுறித்து ஊடகங்களுக்கு தெரியப்படுத்துவோம். சிவசேனை, என்.சி.பி., காங்கிரûஸ உள்ளடக்கிய "மகா விகாஸ் அகாடி' (எம்.வி.ஏ.) அரசு நீண்ட காலம் ஆட்சி புரியும். என்சிபியில் காட்úஸவுக்கு வழங்கப்படும் பொறுப்பு குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும் என்றார் அவர். 
முன்னதாக, 2016ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையிலான பாஜக ஆட்சியில் வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார் கட்சே. தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, அவர் அக்கட்சியில் ஓரங்கப்பட்டதாகக் கூறப்பட்டுவந்தது. இந்நிலையில், அவர் பாஜகவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக, பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்ய கூறும்போது, ஏக்நாத் கட்சே விலகுவதைத் தடுக்க மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரது அரசியல் எதிர்காலத்துக்கு நல்வாழ்த்துகள்.  ராவர் தொகுதி பாஜக மக்களவை உறுப்பினராக உள்ள கட்சேவின் மருமகள் ரக்ஷô கட்சே பாஜகவில் தொடர்வார். அதில் எந்தப் பிரச்னையும் இல்லை என்றார் அவர்.


"கட்சேவின் முடிவு துரதிருஷ்டவசமானது'

ஒளரங்காபாத், அக். 21: கட்சே எடுத்த முடிவு "துரதிர்ஷ்டவசமானது' என்றார், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் ராவ் சாஹிப் தாதாராவ் தான்வே. 
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு புதன்கிழமை அளித்த பேட்டி:
கட்சே சில காரணங்களால் அரசியல் நீரோட்டத்திலிருந்து விலகியிருந்தார். அவருடனான பிரச்னைகள் தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால், அதற்கு நேரம் தேவைப்பட்டது. அதற்காக அவர் பாஜகவை விட்டு வெளியேற வேண்டும் என்று அர்த்தமல்ல. பாஜகவிலிருந்து விலகுவது என்ற அவரது முடிவு துரதிருஷ்டவசமானது. இது அவருக்கு சவாலான நேரம். அவரை நம்பவைக்க கட்சி முடிந்தவரை முயன்றது. அவர் அனைத்தையும் மறந்துவிட்டார். தன்னை அதிகமாக விமர்சித்த கட்சிக்கு அவர் செல்கிறார்.
ஒரு கட்சியில் பணிபுரியும்போது தலைவர்களிடையே வேறுபாடுகள் இருக்கும். அதைப் பற்றிச் சொல்ல புதிதாக எதுவும் இல்லை. கட்சேவும்,
 ஃபட்னவீஸýம் நல்ல நண்பர்களாகத்தான் இருந்தனர் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT