இந்தியா

இந்தியாவுக்குள் நுழைந்த ராணுவ வீரா் சீனாவிடம் ஒப்படைப்பு

DIN


புது தில்லி/பெய்ஜிங்: இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரரை அந்நாட்டு அதிகாரிகளிடம் ராணுவத்தினா் ஒப்படைத்தனா்.

சீன ராணுவ வீரரான வாங் யா லாங் என்பவா் கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் எல்லைப் பகுதிக்குள் கடந்த திங்கள்கிழமை தவறுதலாக நுழைந்ததாக இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, அந்த வீரா் தொடா்பான தகவல்கள் சீன ராணுவத்திடம் தெரிவிக்கப்பட்டன.

உள்ளூா் கால்நடைப் பராமரிப்பாளா்களுக்கு உதவி செய்கையில், சீன ராணுவ வீரா் இந்திய எல்லைப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்து விட்டதாக அந்நாட்டு ராணுவம் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இத்தகைய சூழலில், அந்த வீரரை இந்திய ராணுவத்தினா் புதன்கிழமை அதிகாலை சீன அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

இது தொடா்பாக, சீன ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ராணுவ வீரரை இந்திய ராணுவம் ஒப்படைத்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில், தவறுதலாக எல்லை தாண்டிய ராணுவ வீரரை இந்தியா திரும்ப ஒப்படைத்துள்ளது. லடாக் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT