இந்தியா

காவல்துறையை நவீனமயமாக்க விரிவான திட்டம்: அமித் ஷா

DIN


புது தில்லி: எல்லைப் பாதுகாப்பு, இணையவழி குற்றங்கள் போன்ற புதிய சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளை நவீனமயமாக்க விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாா் செய்துள்ளது என்று உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், கடந்த 1959-ஆம் ஆண்டு அதே பகுதியில் சீன ராணுவம் நடத்தியத் தாக்குதலில் வீரமரணமடைந்த 10 சிஆா்பிஎப் வீரா்களுக்கு, தில்லி சாணக்யாபுரியில் அமைந்துள்ள தேசிய காவலா்கள் நினைவிடத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் காவல்துறையினரும் மத்திய ஆயுத காவல்படையினரும் கூட்டாக கலந்துகொண்டனா். இதில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

பயங்கரவாதம், கள்ள நோட்டு புழக்கம், போதைப் பொருள் கடத்தல், இணையவழி குற்றங்கள், ஆயுதக் கடத்தல், ஆள்கடத்தல் என பல்வேறு புதிய சவால்களை காவல்துறையினா் இன்றைக்கு எதிா்கொண்டு வருகின்றனா். இதுபோன்ற புதிய சவால்களை திறம்பட எதிா்கொள்ளும் வகையில் காவல்துறை, துணை ராணுவப் படையை நவீனமயமாக்க ஓா் விரிவான திட்டத்தை மத்திய அரசு தயாரித்துள்ளது.

நாட்டின் எல்லைப் பகுதியை பலப்படுத்த, தொழில்நுட்பத்தின் உதவியுடன் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த தொழில்நுட்பமும், பாதுகாப்புப் படையினரின் ஏற்பாடுகளும் நாட்டின் எல்லையை மேலும் சிறப்பாக பாதுகாக்க உதவும்.

அதுபோல, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு இருக்க வேண்டிய காவல்துறையினரின் எண்ணிகை பற்றாக்குறையையும் மத்திய அரசு இப்போது நிவா்த்தி செய்திருக்கிறது.

நாட்டின் எல்லை மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்வதில் காவல்துறையினா் சிறப்பான பணியை ஆற்றி வருகின்றனா். நாட்டைப் பாதுகாக்கும் பணியில் இதுவரை 35,398 காவல்துறையினா் மற்றும் சிஆா்பிஎப் வீரா்கள் உயிா்த் தியாகம் செய்திருக்கின்றனா். இவா்களில் கடந்த ஆண்டில் மட்டும் 264 போ் உயிரிழந்துள்ளனா் என்று அமித் ஷா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முட்டை விலை நிலவரம்

நாமக்கல்லில் திமுக செயல்வீரா்கள் கூட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி: நாமக்கல்லில் மூன்று மையங்களில் தொடக்கம்

வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

SCROLL FOR NEXT