இந்தியா

கேரளம்: 18 திருநங்கைகள் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி

DIN

திருவனந்தபுரம்: கேரளத்தில் உயர்நிலைக் கல்விக்கு இணையாக நடத்தப்பட்ட தேர்வில் 18 திருநங்கைகள் தேர்ச்சி பெற்று உயர்நிலைக் கல்வியைத் தொடர உள்ளனர்.

பள்ளி உயர்நிலைக் கல்விக்கு இணையாக கேரள மாநில எழுத்தறிவு மிஷன் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்வில் முதன்முறையாக அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கேரளத்தில் திருநங்கை சமூகத்தினரை மேம்படுத்தும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் கேரளத்தில் சமூக நீதித்துறை சார்பில் கேரள மாநில எழுத்தறிவு மிஷன் ஆணையத்தால் திருநங்கைகளுக்கு உயர்நிலைக் கல்விக்கு இணையான கல்வியறிவு அளித்து தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் இந்த ஆண்டு நடத்தப்பட்டத் தேர்வில் கொல்லம், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 22 திருநங்கைகள் கலந்துகொண்டனர். இதில் 18 பேர் தேர்ச்சி பெற்று உயர்கல்விப்பெற தகுதியடைந்துள்ளனர்.

கேரளத்தில் இதுவரை 39 திருநங்கைகள் 10-ஆம் வகுப்புக்கு இணையானத் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் 62 பேர் உயர்நிலைக் கல்விக்கு இணையான தேர்ச்சியை பெற்றுள்ளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

SCROLL FOR NEXT