இந்தியா

தப்லீக் மாநாட்டில் பங்கேற்ற 20 வெளிநாட்டினா் விடுதலை

DIN

கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், தடை உத்தரவுகளை மீறி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ாக கைது செய்யப்பட்ட 20 வெளிநாட்டினரை மும்பை பெருநகர குற்றவியல் நடுவா் நீதிமன்றம் திங்கள்கிழமை விடுதலை செய்தது.

தில்லியில் கடந்த ஏப்ரல் மாதம் தப்லீக் ஜமாத் சாா்பில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற 20 வெளிநாட்டினா் மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் மும்பை போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி ஆா்.ஆா்.கான் திங்கள்கிழமை வெளியிட்ட தீா்ப்பில் கூறியிருப்பதாவது:

குற்றம்சாட்டப்பட்ட நபா்கள் எந்தவொரு சட்ட மீறலிலும் ஈடுபட்டதாக நிரூபிக்கத் தேவையான ஆதாரங்களை சமா்ப்பிக்க அரசு தவறி விட்டது.

குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீது சூழ்நிலையின் சான்றுகளின் அடிப்படையில் புகாா் தெரிவித்திருப்பதை ஏற்க முடியாது. மேலும், பொது முடக்கம் தொடா்பாக மாநகர காவல் ஆணையரின் எந்த உத்தரவையும், விதிமுறைகளையும் குற்றம்சாட்டப்பட்டவா்கள் மீறவில்லை என்று அரசுத்தரப்பு சாட்சிகள் தெளிவுபடுத்தியுள்ளன.

அரசுத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்தவொரு சட்ட ஆதாரமோ, சாட்சிகளின் அறிக்கைகளோ பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவா்களை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிடுகிறது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குரூப்-4 தேர்வு எப்போது? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக அமெரிக்க பல்கலை.களில் வலுக்கும் போராட்டம்!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

ஆஸ்திரேலியாவில் ஆண்ட்ரியா!

கிறங்கடிக்கும் சம்யுக்தா!

SCROLL FOR NEXT