இந்தியா

10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் சிஏ படிக்கலாம்!

21st Oct 2020 09:16 AM

ADVERTISEMENT


பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பட்டய கணக்காளர் படிப்பில் சேர்ந்து படிக்கலாம் என பட்டயக் கணக்காளர் மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக இந்திய பட்டயக் கணக்காளர் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

சிஏ எனப்படும் பட்டய கணக்காளப் படிப்பில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறையை மாற்றி, தற்போது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே பட்டய கணக்காளர் படிப்பில் சேரலாம் என தெரிவித்துள்ளது. 

இந்த புதிய நடைமுறை இந்தாண்டே அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக, ஐ.சி.ஏ.ஐ.யின் தலைவர் அதுல் குமார் குப்தா கூறியதாவது:-

"பட்டய கணக்காளர் ஒழுங்குமுறை, 1988  ஆம் ஆண்டின் பட்டய கணக்காளர் ஒழுங்குமுறைகளின் விதிமுறைகள் 25 இ, 25 எஃப் மற்றும் 28 எஃப் ஆகியவற்றை திருத்துவதற்கு இந்த நிறுவனம் சமீபத்தில் இந்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளது, இது இப்போது ஒருவர் இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியா பாடநெறியில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற பின்னர் தற்காலிகமாக பதிவு செய்ய உதவுகிறது. எவ்வாறாயினும், பாடநெறிக்கான தற்காலிக சேர்க்கை 12 ஆம் வகுப்பு தேர்வுகளை முடித்தவுடன் மட்டுமே முறைப்படுத்தப்படும் என்று அதுல் குமார் குப்தா கூறினார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT