இந்தியா

'மகாராஷ்டிரம் விரைவில் இயல்புநிலைக்குத் திரும்பும்'

DIN

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் விரைவில் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வது கூறித்து அமைச்சரவையை கூட்டி நாளைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள் 80 முதல் 90 சதவிகிதம் பார்வையிடப்பட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியில் இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு வழங்கியிருந்தால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு நிறைய செய்திருக்க முடியும் என்று கூறினார். 

புகழ் பெற மட்டுமே உதவி தொடர்பான புள்ளிவிவரங்களை அறிவிக்கவில்லை என்றும், தன்னால் நிறைவேற்றக்கூடியதை முதல்வர் செய்து வருவதாகவும் மகாராஷ்டிர அமைச்சர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT