இந்தியா

கரோனா நோய் எதிர்ப்புச் சக்தி 3-5 மாதம்தான் நீடிக்கும்: ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

DIN

புதுதில்லி: கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி என்பது சுமார் மூன்று முதல் ஐந்து மாதங்கள் வரை மட்டுமே நீடிக்கும். ஆதலால், மீண்டும் பாதிக்கப்படலாம் என்று ஐசிஎம்ஆர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் இயக்குநர் மருத்துவர் பல்ராம் பார்க்கவா செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் மீண்டும் தொற்று பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். இது குறித்த புள்ளிவிவரங்களையும் சேகரித்து வருகிறோம். எங்களுக்கு கிடைத்த தகவலின்படி, கரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி சுமார் மூன்று மாதங்கள் நீடிக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன, இன்னும் சில ஆய்வுகளின் படி, சில உடல்களில் ஐந்து மாதங்கள் வரை நீடிக்கும் என்று கூறியுள்ளது. 

"குணமடைந்தவர் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி 90 நாள்களுக்குப்பின் குறையத் தொடங்கினால், மீண்டும் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம். அதாவது 90 நாள்களுக்குப்பின் மீண்டும் தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது."

"எத்தனை பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் எத்தனைபேர் குணமடைந்துள்ளார்கள், குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்று எத்தனை பேருக்குவந்துள்ளது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்".

இது ஒரு புதிய நோயாகும், இது தொடர்பான தகவல்கள் தற்போது வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன, மீட்கப்பட்ட ஐந்து மாதங்களுக்குள் ஒரு நபரின் உடலில் எதிர்ப்புச்சக்தி குறைந்துவிட்டால், கரோனா தொற்றுடன் மறுசீரமைப்பு செய்ய வாய்ப்பு உள்ளது என்று பார்கவா கூறினார்.

மேலும் "கரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒருவர் நோய் எதிர்ப்புச்சக்தி வந்துவிட்டதாகவும், மீண்டும் பாதிக்கப்படமாட்டோம் என்று நம்பாமல், குணமடைந்ததற்கு பின்னரும் தொடர்ந்து முகக்கவசங்களை அணிந்துகொள்வது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பொருத்தமான நடமுறைகளை அவசியம்" என்று பார்கவா கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT