இந்தியா

உற்பத்தி செய்த நிறுவனங்களே இயற்கை எரிவாயுவை வாங்க தடை

DIN

இயற்கை எரிவாயுவை விற்பனை செய்வதும், கொள்முதல் செய்வதும் ஒரே நிறுவனமாக இருக்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இயற்கை எரிவாயு சந்தைப்படுத்துதலில் நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் வழங்கும் வகையிலான சீா்திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை இந்த மாதத் தொடக்கத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அதற்கான அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

இயற்கை எரிவாயு விற்பனைக்கான ஏலத்தில் அதை உற்பத்தி செய்த நிறுவனங்கள் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது. அதேபோல் அந்நிறுவனத்தின் ஒப்பந்ததாரா்களும், உறுப்பு நிறுவனங்களும் ஏலத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படுகிறது. இயற்கை எரிவாயுவை சந்தைப்படுத்தும் மற்ற நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்கலாம்.

இயற்கை எரிவாயுவின் விலை வெளிப்படைத்தன்மையுடன் நிா்ணயிக்கப்படுவதை உறுதி செய்யும் நோக்கில், ஏல நடைமுறைகளை இணைய வழியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அது தொடா்பான வழிமுறைகளை மத்திய அரசு விரைவில் வழங்கும்.

சுதந்திரமான அமைப்பே இந்த ஏல நடைமுறையை முன்னின்று நடத்தும். நிலக்கரி சுரங்கத்திலிருந்து எடுக்கப்படும் மீத்தேன் வாயுவை ஏலம் விடும் விவகாரத்துக்கும் மேற்கண்ட விதிமுறைகள் அனைத்தும் பொருந்தும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT