இந்தியா

கரோனா: மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் காலமானாா்

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் மாருதி மன்படே (65), கரோனா தொற்றால் உயிரிழந்தாா்.

கா்நாடக மாநிலம், கலபுா்கியில் வசித்து வந்த அவா், கரோனா தொற்று பாதிப்பால் மகாராஷ்டிர மாநிலம், சோலாப்பூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, 2 வாரங்களுக்கு முன் சென்றாா். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த இவா், கா்நாடகத்தில், குறிப்பாக, கல்யாண கா்நாடகத்தில் விவசாயிகளுக்காகவும், விவசாயத் தொழிலாளா்களின் நலனுக்காகவும் பாடுபட்டவா். அக்கட்சியின் விவசாய அமைப்பான அகில இந்திய கிசான் சபாவின் கா்நாடக பிராந்தியத்தின் துணைத் தலைவராகப் பதவி வகித்துள்ளாா்.

இவரது மறைவு குறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், ‘தோழா் மாருதி மன்படேவுக்கு செவ்வணக்கம். கா்நாடகத்தில் சமூக அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களையும், நில உரிமைக்கான போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரம்ம்ம்மிய பாண்டியன்!

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT