இந்தியா

சென்னை மெட்ரோ ரயிலில் ஊறுவிளைவிக்காத கிருமிநாசினி

21st Oct 2020 12:43 PM

ADVERTISEMENT


சென்னை மெட்ரோ ரயிலில் கரோனா தடுப்புப் பணிக்காக வேதியியல் ஊறுவிளைவிக்காத கிருமிநாசினியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயன்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொது முடக்கத்துக்குப் பின்பு செப்டம்பர் 7-ம் தேதி முதல் சென்னை மெட்ரோ ரயில் சேவை துவக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ரயில் பெட்டிகள், ரயில் நிலையங்கள் அனைத்தும் கிருமிநாசினி கொண்டு உரிய இடைவெளியில் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு தூய்மைப்படுத்தும் போது, இந்தியாவிலேயே முதன் முயற்சியாக வேதியியல் ஊறுவிளைவிக்காத நீர்வடிவிலான கிருமிநாசினியை பயன்படுத்துகிறது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடிஏ நுட்பம் மூலம் வெளிப்படும் பிராணவாயு கலந்த நுண்ணிய நிறமற்ற திரவ வடிவிலான கிருமிநாசினிகள், வேதியியல் தன்மையை முற்றிலும் தவிர்க்கிறது. இந்த கிருமிநாசினி பயன்படுத்தும் போது கைகளில் மட்டுமல்ல சுற்றுப்புறப் பகுதிகளிலும் காற்றின் மூலம் கிருமிகள் மற்றும் வேதி பரவலை தடுக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : Metro metrotrain coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT