இந்தியா

பிகார் தேர்தல்: பாஜக தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு

DIN


பிகார் பேரவைத் தேர்தலுக்கான பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (வியாழக்கிழமை) வெளியிடுகிறார்.

பிகாரிலுள்ள 243 பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின்றன.

இந்தத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை நிர்மலா சீதாராமன் நாளை பாட்னாவில் வெளியிடுகிறார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 243 தொகுதிகளில் 121 இடங்களில் போட்டியிடுகிறது. தனக்கு ஒதுக்கப்பட்ட 121 இடங்களில் விகாஸ்ஷீல் இன்சான் கட்சிக்கு 11 இடங்களை ஒதுக்கியது. இதன்மூலம், பாஜக 110 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்தது

வாக்களித்த திரைப் பிரபலங்கள் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT