இந்தியா

ஆந்திரம்: 'அடுத்த 4 ஆண்டுகளில் 26,000 காவலர் பணியிடங்கள் நிரப்பப்படும்'

DIN

ஆந்திரத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் 26 ஆயிரம் காவலர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஆண்டுக்கு 6,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறினார். 

காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கலந்துகொண்டு மறைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். இதில் உள்துறை அமைச்சர் மெகதோதி சுசாரிதா, தலைமைச் செயலாளர் நிலம் சாவ்னி, டிஜிபி  சவாங் உள்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ’’தற்போதுள்ள காலிப் பணியிடங்களை கருத்தில்கொண்டு வரும் டிசம்பர் மாதம் முதல் பணி நியமனத்திற்கான பணிகள் தொடங்கப்படும்.

பணியிடங்களுக்கானப் பட்டியல் வரும் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும். பல்வேறு கட்டங்களாக காவலர்களுக்கான காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும். இது தொடர்பான பணிகளை டிஜிபி சவாங் கவனித்து வருகிறார்’’ என்று கூறினார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அரசு ஆட்சியமைத்தபோது காவலர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. காவலர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுவார்கள், அவர்களுக்கு வாரமொருமுறை விடுமுறை அளிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். 

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக காவலர் நல நிதியத்திற்கு செலுத்த வேண்டிய தொகை உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT