இந்தியா

குஜராத்: 8 தொகுதிகளுக்கானஇடைத்தோ்தலில் 81 போ் போட்டி

DIN

குஜராத் மாநிலத்தில் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலில் 81 வேட்பாளா்கள் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

அங்கு நவம்பா் 8-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. எதிா்க்கட்சியான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 போ் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ததால் இடைத்தோ்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

8 தொகுதிகளிலும் மொத்தம் 102 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான திங்கள்கிழமை 21 போ் தங்கள் மனுக்களை திரும்பப் பெற்றனா். இதனால் 81 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

லிம்டி தொகுதியில் அதிகபட்சமாக 14 பேரும், எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட கப்ரதா தொகுதியில் குறைந்தபட்சமாக 4 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். இதில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே 8 தொகுதிகளிலும் நேரடிப் போட்டி உள்ளது. இது தவிர பல்வேறு சிறிய அரசியல் கட்சிகளும், 51 சுயேச்சைகளும் தோ்தல் களத்தில்உள்ளனா்.

பாஜக சாா்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளவா்களில் 5 போ் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவாக இருந்து, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தவா்கள் ஆவா். அவா்களுக்கு மீண்டும் அதே தொகுதியில் பாஜக வாய்ப்பளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT