இந்தியா

கராச்சியில் குண்டு வெடிப்பு: 3 பேர் பலி, 15 பேர் காயம்

21st Oct 2020 11:56 AM

ADVERTISEMENT

 

பாகிஸ்தானின் கராச்சியில் மஸ்கன் சௌராங்கி அருகே குல்ஷன்-இ-இக்பால் பகுதியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர். 

குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்கள் படேல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 

திடீரென ஏற்பட்ட குண்டுவெடிப்புக்கான காரணம் தெரியவில்லை. சிலிண்டர் குண்டுவெடிப்பாக இருக்கலாம் என்று முபினா நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு அகற்றும் குழு ஆராய்ந்து வருகின்றது. 

ADVERTISEMENT

மேலும், குண்டுவெடிப்பு சம்பவம் இரண்டாவது மாடிக் கட்டடத்தில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் கட்டடங்களின் ஜன்னல்கள் மற்றும் சில வாகனங்களும் சேதமடைந்துள்ளது. 

ஒரு நாள் முன்னதாக, ஷெரின் ஜின்னா காலணி அருகே பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT