இந்தியா

குறைந்தபட்ச ஆதார விலை: 'விவசாயிகள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்'

21st Oct 2020 01:13 PM

ADVERTISEMENT

உத்தரப்பிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு குறைவாக தங்களது விளைப் பொருள்களை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் விவசாயிகள் உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் விவசாய சட்டங்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராடி வரும் நிலையில், விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உறுதிசெய்யப்படும் என்று கூறிய மத்திய அரசை பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.

இது குறித்து சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது, ''பாஜக அரசு வேளாண் சட்டங்களை கொண்டுவருவதில் மற்றவர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இந்த சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என்று வேதனைத்தெரிவிக்கும் விவசாயிகளின் வலிகளையும் பாஜக அரசு புரிந்துகொள்ளவில்லை. 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ரூ.1,868-க்கு விற்பனை செய்யவேண்டிய நெல், குவிண்டாலுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,100 வரை மட்டுமே விற்கப்படுகிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

''இதுவே விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படவில்லை எனில் என்ன நடக்கும்'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

''வேளாண் சட்டத்தால் விவசாயத்திற்கு ஆபத்தென்றும், குறைந்தபட்ச ஆதார விலை கூட கிடைக்காது என்றும் வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் புதிய வேளாண் சட்டத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கும் என்று பாஜக அரசு கூறியிருந்தது. குறிப்பாக விவசாயிகளின் வருவாய் உயர்த்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்திருந்தார்'' என்று பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT