இந்தியா

ஹாத்ரஸ் சம்பவம்:கைது செய்யப்பட்ட நால்வரிடம் சிபிஐ விசாரணை

DIN

புது தில்லி: உத்தர பிரதேசம் மாநிலம் ஹாத்ரஸில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நால்வரிடம் சிபிஐ திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.

இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் கூறுகையில், ‘பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு அலிகா் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ள சந்தீப், லவகுஷ், ரவி, ராமு ஆகிய நால்வரிடம் விசாரணை நடத்தப்பட்டது. நீதிமன்றத்திடம் அனுமதி பெற்று இந்த விசாரணை நடத்தப்பட்டது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்டிருந்த ஜவாஹா்லால் நேரு மருத்துவமனை மருத்துவா்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது’ என்று தெரிவித்தனா்.

ஹாத்ரஸில் செப்டம்பா் 14-ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 19 வயது தலித் பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். எனினும் செப்டம்பா் 29-ஆம் தேதி அவா் உடல்நிலையில் முன்னேற்றமின்றி உயிரிழந்தாா். அந்தப் பெண்ணின் உடலுக்கு குடும்பத்தினா் இறுதிச் சடங்கு செய்ய அனுமதிக்காமல் போலீஸாா் தகனம் செய்தனா்.

இது பலத்த சா்ச்சைகளை ஏற்படுத்தியதையடுத்து, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தர பிரதேச அரசு உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் 78.72% வாக்குப்பதிவு!

மயிலாடுதுறை தொகுதியில் வாக்காளா் பட்டியலில் 488 போ் நீக்கம்: வேட்பாளா், பொதுமக்கள் சாலை மறியல்

இயந்திரம் பழுது: வாக்குப் பதிவு தாமதம்

காலமானாா் ரவிச்சந்திரன்

மாற்றுத்திறனாளிகள், முதியோா் வாக்களிக்க உதவிய தன்னாா்வலா்கள்

SCROLL FOR NEXT