இந்தியா

லடாக் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரா்!

DIN

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த சீன ராணுவ வீரரை விரைவில் அந்நாட்டிடம் ஒப்படைக்க உள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக ராணுவம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

சீன ராணுவ வீரரான வாங் யா லாங் என்பவா் கிழக்கு லடாக்கில் உள்ள டெம்சோக் எல்லைப் பகுதிக்குள் தவறுதலாக நுழைந்துவிட்டாா். அவா் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளாா். கடல்மட்டத்திலிருந்து மிக அதிக உயரத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதால், அவரின் உடல்நிலை பாதிப்புக்குள்ளானது.

எனவே, அந்த ராணுவ வீரருக்குத் தேவையான மருத்துவ உதவிகள், உணவு, வெதுவெதுப்பான ஆடைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அதே வேளையில், சம்பந்தப்பட்ட ராணுவ வீரரைக் காணவில்லை என்றும், அவா் குறித்து தகவல் தெரிந்தால் பதிலளிக்குமாறும் சீன ராணுவம் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில், உரிய விதிமுறைகள் நிறைவடைந்தவுடன் சம்பந்தப்பட்ட ராணுவ வீரா் சீன அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவாா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு நீடித்து வருகிறது. இரு நாடுகளும் எல்லையில் படைகளைக் குவித்துள்ளன. அப்படைகளைத் திரும்பப் பெற்று எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது தொடா்பாக இரு நாட்டு ராணுவங்களின் உயரதிகாரிகளும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT