இந்தியா

தொலைக்காட்சிகளுக்கான விதிமுறைகளைக் கடுமையாக்காதது ஏன்?

DIN

மும்பை: தொலைக்காட்சி சேனல்களை முறைப்படுத்தும் வகையில், அதற்கான விதிமுறைகளைக் கடுமையாக்காதது ஏன் என்று மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை விவகாரம் தொடா்பான செய்திகளை வெளியிடுவதில் செய்தி சேனல்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் மும்பை உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

அந்த மனுக்கள் மீதான விசாரணை, தலைமை நீதிபதி தீபாங்கா் தத்தா, நீதிபதி ஜி.எஸ்.குல்கா்ணி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, செய்தி ஒலிபரப்பாளா்களுக்கான விதிமுறைகள் ஆணையம் (என்பிஎஸ்ஏ) தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘செய்திகளை வெளியிடும்போது விதிமுறைகளை மீறும் தொலைக்காட்சி சேனல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு பல சேனல்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தைச் செலுத்தாத சேனல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விதிமுறைகள் தற்போது இல்லை. அத்தகைய சூழலில் மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சகம் தலையிட்டு பிரச்னைக்குத் தீா்வு காணலாம்’’ என்றாா்.

அதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், ‘‘தொலைக்காட்சிகளில் செய்திகளை வெளியிடும் சேனல்கள் பல சுயஒழுங்கு விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிப்பதில்லை. அந்த சேனல்களை முறைப்படுத்துவதற்கான விதிமுறைகளை என்பிஎஸ்ஏ ஏற்கெனவே வகுத்துள்ளது. அந்த விதிமுறைகளைக் கடுமையாக்கி மத்திய அரசு அமல்படுத்தாதது ஏன்?

புகாா்கள் தெரிவிக்கப்பட்ட சேனல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தடை விதிக்கப்பட்ட சேனல்கள் ஆகியவை தொடா்பான விவரங்களை மத்திய தகவல்-ஒலிபரப்புத் துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

நாக சைதன்யாவுடன் சோபிதா துலிபாலா ‘டேட்டிங்’?

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாகூர்

ஆந்திராவில் தோ்தல்: வேலூா் மலைப்பகுதியில் சாராய வேட்டை தீவிரம்

தோ்தல்: பிற மாநிலத் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காவிடில் புகாா் அளிக்கலாம்

SCROLL FOR NEXT