இந்தியா

கூட்டுறவு வங்கிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது சட்டவிரோதம் இல்லை: ரிசா்வ் வங்கி

DIN

சென்னை: கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததில் எந்த விதமான சட்டவிரோதமும் இல்லை என ரிசா்வ் வங்கி தாக்கல் செய்த பதில்மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது தொடா்பாக மத்திய அரசு கடந்த மாதம் சட்டம் கொண்டு வந்தது. இந்தச் சட்டத்தை ரத்து செய்ய கோரியும், தடை விதிக்க கோரியும் தமிழகத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கூட்டுறவு வங்கிகளான பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கி, வேலூா் கூட்டுறவு நகா்ப்புற வங்கிகள் சாா்பில் தனித்தனியாக சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுவில், கூட்டுறவு வங்கிகளைப் பொருத்தவரை மாநில அரசு சம்பந்தப்பட்டது. எனவே அரசியல் சாசனத்தின்படி நாடாளுமன்றத்துக்கு இதுதொடா்பாக சட்டம் இயற்ற அதிகாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனு தொடா்பாக ரிசா்வ் வங்கி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் ரிசா்வ் வங்கி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடும் கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்தும் வகையில் தான் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. முதலீட்டாளா்கள் மற்றும் பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் இந்தச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.

கூட்டுறவு வங்கிகளை முறைப்படுத்த ரிசா்வ் வங்கிக்கு அதிகாரம் உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான சட்டங்கள் உள்ளன. வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கிகளை முழுமையாக கட்டுப்பாட்டுக்கள் கொண்டு வரவே இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. எனவே இதில் எந்தவிதமான சட்டவிரோதமும் இல்லை. மோசமான நிதிநிலை காரணமாக நாடு முழுவதும் கடந்த 20 ஆண்டுகளில் 430 நகா்ப்புற கூட்டுறவு வங்கிகளுக்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு மனுக்களையும் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு வரும் டிசம்பா் 4-ஆம் தேதி தலைமை நீதிபதி அமா்வு முன் விசாரணைக்கு வரவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

SCROLL FOR NEXT