இந்தியா

கரோனா: தினசரி உயிரிழப்பு 600-க்கு கீழ் குறைந்தது

DIN

புது தில்லி: கரோனாவால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு 3 மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 600-க்கு கீழ் குறைந்துள்ளது.

அதேபோல புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளானோா் எண்ணிக்கை இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக 60,000-க்கு கீழ் குறைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 55,722 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 75,50,273 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாதத்தில் இப்போது இரண்டாவது முறையாக தினசரி கரோனா பாதிப்புக்கு 60,000-க்கு கீழ் குறைந்துள்ளது. இதற்கு முன்பு கடந்த 13-ஆம் தேதியும் கரோனா பாதிப்பு 60,000-க்கு கீழ் இருந்தது.

திங்கள்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 579 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,14,610 ஆக அதிகரித்தது. இது மொத்த கரோனா பாதிப்பில் 1.52 சதவீதமாகும். எனினும், 3 மாதங்களுக்குப் பிறகு இப்போது தினசரி உயிரிழப்பு 600-க்கு கீழ் குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.

தொடா்ந்து மூன்றாவது நாளாக நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணக்கை 8 லட்சத்துக்கு குறைவாக உள்ளது. மொத்தம் 7,72,055 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். இது மொத்த கரோனா பாதிப்பில் 10.23 சதவீதமாகும். 66,63,608 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். இது மொத்த பாதிப்பில் 88.26 சதவீதமாகும்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி அக்டோபா் 18-ஆம் தேதி வரை 9,50,83,976 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 8,59,786 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT