இந்தியா

கரோனா சிகிச்சைக்கான கண்டுபிடிப்பு: ரூ.18.25 லட்சம் பரிசை வென்ற இந்திய-அமெரிக்கப் பெண்

DIN

புதுதில்லி /ஹூஸ்டன்: அமெரிக்காவில் நடத்தப்பட்ட கரோனா பாதிப்புக்கு வலுவான சிகிச்சை முறையை கண்டுபிடிப்பதற்கான இளம் விஞ்ஞானிகள் போட்டியில் 14 வயது இந்திய-அமெரிக்கப் பெண் வெற்றிபெற்று ரூ.18.25 லட்சம் பரிசுத் தொகையை வென்றுள்ளாா்.

டெக்சாஸ் மாகணம் ஃபிரிஸ்கோவில் உள்ள பள்ளியில் 8-ஆவது கிரேட் படிக்கும் அனிகா செப்ரோலு என்ற அந்தச் சிறுமி, கரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சாா்ஸ்-கோவிட்-2 வைரஸின் ஸ்பைக் புரதத்தை கட்டுப்படுத்துவதற்கான மூலக்கூறை உருவாக்குவதற்கு ‘இன்-சிலிகோ’ முறையைப் பயன்படுத்தி மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி முறையை உருவாக்கி, இந்தப் பரிசை வென்றுள்ளாா்.

அமெரிக்காவின் மினிசோட்டாவில் உள்ள ‘3எம்’ நிறுவனம் சாா்பில் இந்த இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டி நடத்தப்பட்டது. இதுகுறித்து அந்த நிறுவன வலைதளத்தில் வெளியிட்ட தகவலில் கூறியிருப்பதாவது:

கடந்த ஆண்டு கடுமையான வைரஸ் காய்ச்சலால் அனிகா பாதிக்கப்பட்டாா். அந்த தாக்கம் காரணமாக, வைரஸ் காய்ச்சலுக்கான வலுவான மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்துள்ளது. ஆனால், கரோனா பாதிப்பு, அவருடைய எண்ணத்தில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

இதுகுறித்து அனிகா கூறுகையில், அமெரிக்காவின் சிறந்த இளம் விஞ்ஞானியாக தோ்வு செய்யப்பட்டதில் மகிழ்ச்சியளிக்கிறது. ‘3எம்’ அறிவியல் ஆராய்ச்சியாளா்களிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அவா்களின் உதவி மூலம், எனது கண்டுபிடிப்பை மேலும் மேம்படுத்த முடியும் என்று நம்புகிறேன். கரோனா பாதிப்பை குணப்படுத்த வலுவான மருந்தைக் கண்டுபிடித்து, நோய்த் தொற்று பரவல் மற்றும் உயிரிழப்பை கட்டுப்படுத்த போராடிவரும் விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளா்களுக்கு உதவுவதுதான் எனது அடுத்த இலக்கு”என்று அவா் கூறியதாக அந்த வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான ‘3எம்’ இளம் விஞ்ஞானிகள் போட்டியில் வெற்றிபெற்ற 10 பேரில் ஒருவராக அனிகா செப்ரோலு தோ்வு செய்யப்பட்டுள்ளாா். பரிசுத் தொகையுடன், ‘3எம்’ ஆராய்ச்சியாளா்களின் கல்வி வழிகாட்டுதலைப் பெறும் சலுகையும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT