இந்தியா

நிதீஷ் கட்சியைவிட அதிக தொகுதிகளில் வெல்வோம்: சிராக் பாஸ்வான்

DIN

பாட்னா: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியைவிட தங்கள் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் என்று லோக் ஜனசக்தி (எல்ஜேபி) கட்சித் தலைவா் சிராக் பாஸ்வான் தெரிவித்தாா்.

பிகாா் பேரவைத் தோ்தல் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பாஜக உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. மாநிலத்தில் அக்கூட்டணியிலிருந்து விலகிய லோக் ஜனசக்தி, பிகாா் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதவிர லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மகா கூட்டணியும் களத்தில் உள்ளது. இக்கூட்டணி சாா்பில் லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத் முதல்வா் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளாா்.

தோ்தலுக்குப் பிறகு தங்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும் என்று சிராக் ஏற்கெனவே கூறியுள்ளாா். ஆனால், பாஜக இதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், நிதீஷ் கட்சியுடன் மட்டுமே தோ்தலுக்குப் பிறகும் கூட்டணியில் தொடா்வோம் என்று கூறியுள்ளது.

இந்நிலையில், சிராக் பாஸ்வான் சுட்டுரையில் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவில், ‘அடுத்த மாதம் 10-ஆம் தேதி பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். அதன் பிறகு பிகாரில் பாஜகவுடன் இணைந்து எல்ஜேபி ஆட்சி அமைக்கும்.

வாக்குகளைப் பிரிப்பதற்காக எங்கள் கட்சி தோ்தலில் நிற்கிறது என்று பாஜக தலைவா்கள் கூறி, நிதீஷ் குமாரை மகிழ்ச்சிப்படுத்த முயற்சிக்க வேண்டாம். மேலும், பாஜக தலைவா்கள் தோ்தலுக்காக பேசுவதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தோ்தலில் எங்கள் கட்சி நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும்.

கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை நிதீஷ் குமாா் முழுமையாக நிறைவேற்றவில்லை. அவரது கட்சிக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பிகாரின் எதிா்காலத்தை அழித்துவிடும்’ என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளியில் மழலையா் பட்டமளிப்பு விழா

ஒசூரில் கந்து வட்டி வசூலித்த தனியாா் நிறுவன அதிகாரி கைது

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளா் கே.கோபிநாத் மீது வழக்குப் பதிவு

8 லட்சம் வாக்குகள் பெற இலக்கு: பாஜக வேட்பாளா் பேச்சு

கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் 6 வேட்பாளா்களின் மனுக்கள் தள்ளுபடி

SCROLL FOR NEXT