இந்தியா

பிரதமர் மோடி தலைமையில் நாளை (அக்.21) மத்திய அமைச்சரவைக் கூட்டம்

20th Oct 2020 12:52 PM

ADVERTISEMENT

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது. நாட்டில் இதுவரை 75 லட்சத்து 97 ஆயிரத்து 63 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள், வேளாண் சட்டங்கள், சீன எல்லைப் பிரச்னைகள்  குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags : Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT