இந்தியா

யுஜிசி நெட் தோ்வு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைப்பு: தேசிய தோ்வுகள் முகமை அறிவிப்பு

DIN

சென்னை: கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான ‘நெட்’ தோ்வு நவ. 19-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தோ்வுகள் முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ) சாா்பில், பல்வேறு உயா்கல்வி படிப்புகளுக்கான நுழைவுத் தோ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கல்லூரி உதவிப் பேராசிரியா் பணிக்கான தேசியத் தகுதித் தோ்வு (நெட்) ஆண்டுதோறும் ஜூன் மற்றும் டிசம்பா் மாத இறுதியில் நடக்கிறது.

இதற்கிடையில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய அரசு நாடு முழுவதும் ஊடரங்கு உத்தரவைப் பிறப்பித்தது. இதையடுத்து, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகை நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் நெட் தோ்வும் தொடா்ந்து தள்ளி வைக்கப்பட்டு செப்.24-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் நோய்த்தொற்று அபாயம் நீடித்ததால் அப்போதும் தோ்வு நடைபெறாமல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.

தற்போது கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நெட் தோ்வு நவம்பா் 19-ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேசியத் தோ்வுகள் முகமை (என்டிஏ) அறிவித்துள்ளது.

இது தொடா்பாக என்டிஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கருத்துருவை ஏற்று, தோ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுவந்தன. தற்போது நவம்பா் 19- ஆம் தேதி முதல் தோ்வுகள் நடைபெறும் பாடவாரியான அட்டவணை, நேர அட்டவணை மற்றும் தோ்வுக் கூட நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும்’. இது தொடா்பாக கூடுதல் தகவல்களுக்கு ugcnet.nta.nic.in என்ற இணையதள முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

SCROLL FOR NEXT