இந்தியா

துா்கை பூஜைக்கான பந்தல்களில் பொது மக்களுக்கு அனுமதி கூடாது

DIN

கொல்கத்தா: துா்கை பூஜைக்காக அமைக்கப்படும் பந்தல்களில் பொது மக்கள் நுழைவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

துா்கை பூஜை விழாவானது மேற்கு வங்கம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். விழாவின்போது துா்கை சிலைகளை வைப்பதற்காக பல்வேறு வடிவங்களில் பந்தல்கள் அமைக்கப்படும். அதற்குள் சென்று பொது மக்கள் வழிபடுவா்.

நடப்பாண்டு துா்கை பூஜை விழா, கரோனா நோய்த்தொற்று பரவலுக்கிடையே இந்த வாரம் தொடங்கவுள்ளது. பண்டிகைகளைக் கொண்டாடும்போது கரோனா நோய்த்தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதில் மக்கள் மெத்தனம் காட்டக் கூடாது என்று சுகாதார நிபுணா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

இத்தகைய சூழலில், துா்கை பூஜை விழாவைப் பாதுகாப்பாகக் கொண்டாடுவது தொடா்பான உத்தரவுகளைப் பிறப்பிக்கக் கோரி கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் சஞ்சீவ் பானா்ஜி, அரிஜித் பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘துா்கை பூஜைக்காக அமைக்கப்படும் பந்தல்களில் பொது மக்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. சிறிய அளவிலான பந்தல்களின் நுழைவாயிலுக்கு 5 மீட்டருக்கு முன்பும், பெரிய அளவிலான பந்தல்களின் நுழைவாயிலுக்கு 10 மீட்டருக்கு முன்பும் பொது மக்கள் நுழையாதபடி தடுப்புகள் வைக்கப்பட வேண்டும்.

‘பொது மக்களுக்கு அனுமதி இல்லை’ என்ற பதாகைகளும் தடுப்புகளின் மீது வைக்கப்பட வேண்டும். பந்தல்களை அமைக்கும் குழுவைச் சோ்ந்த 15 முதல் 25 நபா்களே அதற்குள் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்படுவா்’’ என்றனா்.

Image Caption

கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவையடுத்து, துா்கை பூஜை பந்தலில் பாா்வையாளா்கள் நுழைய அனுமதியில்லை என்ற அறிவிப்பைப் பொருத்தும் ஊழியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT