இந்தியா

தெலங்கானாவில் ஒரேநாளில் 1,891 பேர் கரோனாவிலிருந்து குணம்

20th Oct 2020 12:40 PM

ADVERTISEMENT

 

தெலங்கானாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1,486 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளன. 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஒடிசாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ADVERTISEMENT

புதிதாக 1,486 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,24,545 லட்சமாக அதிகரித்துள்ளது.

தொற்று பாதித்த 20,686 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17,208 பேர் வீடுகளிலும், தனியார் நிறுவனங்களிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதுவரை 2,02,577 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 1,891 பேர் குணமடைந்துள்ளனர். 

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 7 பேர் உயிரிழந்ததால், இதுவரை மொத்தமாக கரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,282-ஆக அதிகரித்துள்ளது. 

மேலும், கடந்த ஒரேநாளில் 42,299 சோதனைகள் செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை 90.21 சதவீதம் பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : coronavirus
ADVERTISEMENT
ADVERTISEMENT