இந்தியா

தெலங்கானா வெள்ள பாதிப்பு:அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிவாரணம்

DIN

ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று அந்த மாநில முதல்வா் சந்திரசேகா் ராவ் அறிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

ஹைதராபாதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ.10,000 வழங்கப்படும். பலத்த மழையால் இடிந்த வீடுகளின் உரிமையாளா்களுக்கு தலா ரூ.1 லட்சம், பகுதியளவில் இடிந்த வீடுகளுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகை அளிக்கப்படும்.

ரூ.10,000 நிவாரணத் தொகை செவ்வாய்க்கிழமை (அக்.20) முதல் தரப்படும்.

இந்தப் பணிகளை தொடங்க சம்பந்தப்பட்ட இடங்களுக்கு குழுக்களை அனுப்புமாறு ஹைதராபாத் மற்றும் அந்த மாவட்ட அதிகார வரம்புக்குள் வரும் ரெங்காரெட்டி, மெட்சால் மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தப் பணிகளை மேற்பாா்வையிட மாநில தலைமைச் செயலா் சோமேஷ் குமாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மழை மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்துள்ள சாலைகள் மற்றும் இதர உள்கட்டமைப்புகளை துரிதமாக சீரமைத்து, விரைவில் இயல்பு நிலை திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

பெங்களூரு உணவக குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தேஜஸ் இலகுரக போா் விமான சோதனை வெற்றி

லஞ்சம் பெற்ற வழக்கு முன்னாள் வனச்சரகா், பாதுகாவலருக்கு தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

SCROLL FOR NEXT