இந்தியா

தெலுங்கு தேசம் கட்சி அரசியல் தலைமைக் குழு மாற்றியமைப்பு

DIN

அமராவதி: தெலுங்கு தேச கட்சியின் அரசியல் தலைமைக் குழு (பொலிட்பியூரோ) மற்றும் மத்திய குழுவை அக்கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை மாற்றியமைத்தாா். கட்சியின் துணைத் தலைவரான கிஞ்சாரப்பு அட்சன்நாயுடு ஆந்திர மாநில கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டாா்.

கட்சியின் தெலங்கானா மாநில தலைவராக இருந்த எல்.ரமணா அப்பதவியில் தொடருகிறாா். இருப்பினும் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில கட்சிக்குழுவை மாற்றி அமைக்காமல் புதிய தலைவரை நியமித்துள்ளாா்.

ஆந்திர மாநில தலைவராக நியமிக்கப்பட்ட கிஞ்சாரப்பு அட்சன்நாயுடு தொழிலாளா் ஈட்டுறுதி நலவாரியத்தில்(இஎஸ்ஐ) பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் அண்மையில் கைது செய்யப்பட்டவா் ஆவாா். சமீபத்தில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சா் கொல்லு ரவீந்திராவும் அரசியல் தலைமை குழுவில் இடம் பெற்றுள்ளாா்.

நடிகரும், இரண்டு முறை எம்.எல்.ஏ.வுமான நந்தமூரி பாலகிருஷ்ணா முதன் முறையாக கட்சியின் அரசியல் தலைமை குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டாா்.

இந்த அரசியல் தலைமைக் குழுவில் மொத்தம் 25 உறுப்பினா்கள் உள்ளனா்.

15 போ் உறுப்பினராக கொண்ட மத்திய பொதுக்குழுவின் பொதுச் செயலாளராக சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தொடருகிறாா். மேலும், இவா் அரசியல் தலைமைக் குழுவிலும் இடம் பெறுவாா்.

குண்டூா் தொகுதி எம்.பி. ஹல்லா ஜெயதேவ் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டாா். அந்த பதவியிலிருந்த அவரது தாய் ஹல்லா அருணா குமாரி மத்திய குழுவின் துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளாா்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஸ்ரீராம் ராஜகோபால் தத்தையா கட்சியின் பொருளாளராக நியமிக்கப்பட்டாா். எம்.எல்.சி. பச்சுலா அா்ஜுன் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவராக நியமிக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT