இந்தியா

பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை

20th Oct 2020 01:13 PM

ADVERTISEMENT

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு உரையாற்ற உள்ளார்.

இன்று மாலை 6 மணிக்கு ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அனைவரும் நிச்சயம் இணைந்திருங்கள் என்று ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் கரோனா பரவல் மெல்ல குறைந்து வரும் நிலையில், கரோனா தொற்று காரணமாக அமல்படுத்தப்பட்டு, தற்போது பல்வேறு கட்ட தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது நாடு முழுவதும் நவராத்திரி கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி உள்ளிட்டப் பண்டிகைகள் வரவிருக்கும் நிலையில், ஒரு தகவலுடன் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றவிருப்பதாகக் கூறியிருப்பது பொதுமக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : pm modi பிரதமர் நரேந்திர மோடி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT