இந்தியா

3 மாதங்களுக்குப் பின் 50,000-க்கும் குறைவான ஒருநாள் கரோனா பாதிப்பு

DIN

புது தில்லி: நாட்டில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 46,790 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 587 பேர் பலியாகியுள்ளனர். 

சுமார் மூன்று மாதங்களுக்குப் பின் நாட்டில் கரோனா பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. கடைசியாக கடந்த ஜூலை மாதம் 23-ம் தேதி ஒரு நாள் பாதிப்பு 45,720 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கரோனாவால் ஏற்படும் தினசரி உயிரிழப்பு 3 மாதங்களுக்குப் பிறகு இரண்டாவது நாளாக இன்றும் 600-க்குக் கீழ் குறைந்து, 587 ஆகப் பதிவாகியுள்ளது. அதேபோல புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளானோா் எண்ணிக்கை இன்று 50,000-க்கு கீழ் குறைந்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 46,790 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 75,97,063 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கரோனா பாதிப்பு இன்று 50,000-க்கு கீழ் குறைந்துள்ளது. 

செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 587 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதனால் மொத்த உயிரிழப்பு 1,15,197 ஆக அதிகரித்தது. இப்போது தினசரி உயிரிழப்பு இரண்டாவது நாளாக 600-க்கும் கீழ் குறைந்துள்ளது ஆறுதல் அளிக்கும் தகவலாக அமைந்துள்ளது.

தொடா்ந்து மூன்றாவது நாளாக நாட்டில் கரோனா தொற்றுடன் இருப்போா் எண்ணக்கை 8 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. மொத்தம் 7,48,538 போ் கரோனா தொற்றுடன் உள்ளனா். 67,33,328 போ் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனா். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு ஓரிடம்; போட்டி வேறிடம்!

அன்பைப் பரிமாறிய பிரேமலதா - தமிழிசை

தோ்தல் புறக்கணிப்பை கைவிட்ட எண்ணூா் மக்கள்

வாக்களிக்க தாமதப்படுத்தியதாக நரிக்குறவா் இன மக்கள் புகாா் இரவு வரை நீடித்த வாக்குப்பதிவு

வாக்கு எண்ணும் மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

SCROLL FOR NEXT