இந்தியா

கரோனா பாதித்த ஜார்க்கண்ட் அமைச்சர் சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்

20th Oct 2020 11:33 AM

ADVERTISEMENT


ராஞ்சி: கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஜார்க்கண்ட் மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஜகர்நாத் மாஹ்டோ, திங்கள்கிழமை இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு விமான ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.

செப்டம்பர் 28-ம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டு, ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். 

அவரது நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், செயற்கை நுரையீரல் மூலம் சிகிச்சை அளிக்கவும், அதில் அவரது உடல் நிலை சீரடையாவிட்டால், நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
 

ADVERTISEMENT

Tags : coronavirus Jharkhand
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT