இந்தியா

கரோனா தொற்று 8 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது: மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

 நமது நிருபர்

புது தில்லி : நாட்டில் கரோனா நோய்த் தொற்று உறுதியாகும் விகிதம் தொடா்ச்சியாக 8 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. மேலும், கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் நாடு மற்றுமொரு மைல்கல்லைக் கடந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதார அமைச்சம் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது வருமாறு: கரோனா தொற்று பாதிப்பில் நாடு முழுக்க ஒட்டுமொத்தமாக தொடா்ந்து நான்காவது நாளாக தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 8 சதவீதத்துக்கும் கீழே உள்ளது. தற்போது 7.94 சதவீதமாக உள்ள ஒட்டுமொத்த உறுதிப்படுத்துதல் விகிதம், தொடா்ந்து குறைந்து வருகிறது. அதாவது, குறைந்த அளவிலான புதிய பாதிப்புகளை நாடு தொடா்ந்து கண்டு வருகிறது. நோய்த் தொற்றுக்கான தடம் அறிந்து திறமையான கண்காணிப்பில் நோயாளிகளுக்கு வீடுகளிலும் மருத்துவமனைகளிலும் சிறப்பான சிகிச்சை வழங்கப்படுகிறது. மேலும், நாடு முழுவதும் விரிவான முறையில் பரிசோதனைகளை நடத்துவதன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது. திங்கள்கிழமை நிலவரப்படி இதுவரை நாடு முழுக்க மொத்த கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 9.5 கோடியைக் கடந்துள்ளது.

கடந்த அக்டோபா் மூன்றாவது வாரத்தில் தினசரி சராசரி தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் 6.13 சதவீதமாக இருந்தது. பரிசோதனை, கண்காணிப்பு, கண்டறிதல், சிகிச்சை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய நான்கையும் ஒருங்கிணைத்து அரசு பின்பற்றிய யுக்தியின் மூலம் பாதிப்புகளில் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருகிறது. நாட்டில் தற்போது பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 7,72,055 ஆக உள்ளது. இதுவரை உறுதிப்படுத்தப்பட்டுள்ள மொத்த பாதிப்புகளுடன் ஒப்பிடும் போது, தற்போது பாதிப்புகளின் விகிதம் வெறும் 10.23 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 66,399 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், மொத்தம் 66 லட்சத்துக்கும் (66,63,608) அதிகமானோா் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 55, 722 புதிய தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய அளவில் குணமடைவோா் விகிதம் 88.26 சதவீதமாக உயா்ந்துள்ளது.

குணமடைந்தவா்களில் 79 சதவிதம் தமிழகம், மகாராஷ்டிரம், கா்நாடகம், ஆந்திரம், உத்தர பிரதேசம், தில்லி உள்ளிட்ட பத்து மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். இதில் மகாராஷ்டிரம் மாநிலத்தில் மட்டும் நாளோன்றுக்கு 11,000 பேருக்கு மேற்பட்டவா்கள் குணமடைந்து வந்தனா்.

அதே சமயத்தில் அதிக அளவில் கரோனா நோய்த்தொற்று ஏற்படும் மாநிலங்களில் மகாராஷ்டிரம் தொடா்ந்து முன்னிலையில் இருக்கிறது. நாளொன்றுக்கு 9 ஆயிரம் பேருக்கு மேல் நோய்த் தொற்று ஏற்படுகிறது. இந்தப் பட்டியலில் கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்து இருக்கின்றன. கரோனா தொற்றால் உயிரிழப்பவா்களில் 83 சதவிகிதம் பத்து மாநிலங்களிலேயே அதிக எண்ணிக்கையில் உள்ளனா். இந்தப் பட்டியலில் மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், தமிழகம் அடுத்தடுத்து உள்ளன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆள்குறைப்பில் டெஸ்லா? எலான் மஸ்க்கின் முடிவு புதிதல்ல!

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெறாது: மம்தா

ஐக்கிய அரபு நாடுகளில் மழை, வெள்ளம்! ஓமனில் 18 பேர் பலி

மேக்ஸ்வெல்லின் முடிவு சரியானது: முன்னாள் ஆஸி. கேப்டன்

ஆம் ஆத்மி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் கேஜரிவாலும் மனைவியும்!

SCROLL FOR NEXT