இந்தியா

ஆந்திரத்தில் வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட்ட முதல்வர் ஜெகன்மோகன்

DIN

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஜெகன்மோகன் வான்வழியாக திங்கள்கிழமை பார்வையிட்டார்.

கடந்த சில தினங்களாக ஆந்திரம், தெலங்கானா மற்றும் கர்நாடகம் ஆகியப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வான்வழியாக முதல்வர் ஜெகன்மோகன் பார்வையிட்டார். கிருஷ்ணா மற்றும் குண்டூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்ட அவர் நிவாரண உதவிகளுக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஜெகன்மோகன் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் இழப்புகளை உடனடியாகக் மதிப்பிட்டு விவசாயிகளுக்கு மானியம் வழங்க உத்தரவிட்டார்.

முதல்வர் ஜெகன்மோகனுடன் உள்துறை அமைச்சர் மெகதோதி சுச்சரிதா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT