இந்தியா

கரோனா விதிமுறைகள் மீறல்: பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு

20th Oct 2020 09:07 AM

ADVERTISEMENT

 

இந்தூர்: கரோனா விதிமுறைகளை மீறியதாக மத்தியப் பிரதேச பாஜக தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் தினேஷ் பவ்சார். இவர் கடந்த 19-ஆம் தேதியன்று சன்வேர் தாலுகாவில் மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுஹான் நடத்திய சாலைப் பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தோற்றுப் பரவலைத் தடுக்கும் பொருட்டு மாநிலத்தில் அமலில் உள்ள கரோனா விதிமுறைகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் இந்தூர் காவல்துறையினர் தினேஷ் பவ்சார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இந்த விவகாரத்தில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT